Monday 15 February 2010

காமம் கொலை ஜெயேந்திரர் - வாழ்க சங்கர மடம்

சங்கரராமன் கொலை வழக்கில் நடப்பவற்றைப் பார்த்தால் இந்தியாவில் எவ்வளவு மோசமான ஊழல் மோசடி நிலவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்திய சட்டமும் நிர்வாகமும் பிராமண சாதியாருக்கு சார்பாக எவ்வாறு வளைகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த சாட்சியாக அமைகிறது.

ஒவ்வொரு தடவை சாட்சிகள் விசாரிக்கப்படும் போதும் சாட்சிகள் தாம் அப்படி சொல்லவில்லை என்று பிறழ்சாட்சியாக மாறுவதும், தமிழ்நாட்டு பத்திரிகைகள், ‘சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் இரண்டு சாட்சிகள் பல்டி’... ‘மேலும் ஏழுசாட்சிகள் பல்டி’.. என செய்திகள் போடுவதும் வழமையாகி விட்டது. இப்படி இதுவரை 26 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ள போதும் தமிழ்நாட்டு செய்திப் பத்திரிகைகளும், வாரஇதழ்களும் ஏதோ கிரிக்கெட் விளையாட்டில் நேர்முக வர்ணனை செய்வது போல சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறுவதை வெகு சாதாரணமாக சொல்லுகின்றன. நீதியின் பக்கம் இருக்க வேண்டிய செய்தித்தாள்களுக்கு பிரபுதேவா நயன்தாரா பிரச்சனை பற்றி எழுதவே நேரம் போதாமல் இருக்கிறது.

ஆனால் இதே தமிழ்நாட்டு செய்திப் பத்திரிகைகளும், வாரஇதழ்களும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு அவரது காமலீலைகள் விசாரணைகளில் வெளிவரத்தொடங்கியதும் ஆனந்தக்கூத்தாடின. ஒரு கொலைகாரன், காமக்கொடூரன், மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்பதற்காக அவை அப்படி ஆனந்தக்கூத்தாடின என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். தங்களுக்கு கிளுப்பான செய்தி கிடைத்துவிட்டது...ஜெயேந்திரரின் ஜல்சா என்று எழுதியே பத்திரிகை விற்பனையை கூட்டி விடலாம் என்பதுதான் அதற்கு காரணம்.

அவை போட்டி போட்டு செய்திகளை வெளியிட்டன. ஜெயேந்திரர் ஹார்லிக்ஸ் ஷர்மிலாவுடன் உல்லாசம், லீலாவுடன் லீலை, சீரங்கம் உஷாவுடன் அர்த்தராத்திரியில் சௌன்தர்ய லஹரி, சொர்ணமால்யாவுடன் காம லீலை இப்படி சினிமா கிசுகிசு போல படு இரசனையாக எழுதித்தள்ளின.

இத்தனைக்கும் சங்கரராமன் உயிரோடு இருந்த போது இந்தப் பத்திரிகைகளுக்கு சங்கர மடத்தில் நடக்கின்ற ஊழல்கள்களை பல கடிதங்கள் மூலம் தொடர்ந்து தெரிவித்திருக்கிறார். ஆனால் யாரும் அதுபற்றி கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பில் புலன்விசாரணையை மேற்கொண்டு உண்மையை அம்பலப்படுத்த வேண்டிய பத்திரிகைகள் நடிகைகள் யாரோடு படுத்தார்கள், யாரோடு இரவு விடுதிகளில் மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டார்கள் என்பது பற்றி வாசகர்களுக்கு சுடச்சுட செய்திகளை தந்து கொண்டிருந்தன .

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று தெரிந்த சங்கராச்சாரி காவிக்கும்பல் வழக்கை தமது பிராமண சக்தியை பாவித்து புதுவைக்கு மாற்றிக் கொண்டனர். ( தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை என்னால் விசாரிக்க முடியாது. நான் ஜெயேந்திரரின் பக்தன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.) காவிக்கும்பலுக்கு காவடி எடுக்கும் உச்ச நீதிமன்றும் தன்னாலான உதவிகளை தமது ஆன்மீக குருக்களுக்கு செய்தது. தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்று கட்டளையிட்டது.

பத்திரிகைகளும் காம லீலைகளை எழுதி எழுதி ஓய்ந்து விட்டதாலும் அதன் பிறகு பிரபுதேவா நயன்தாரா போன்ற நாட்டுக்குத்தேவையான சமூக விடயங்கள் வந்து விட்டதாலும் ஜெயேந்திரரை மறந்துவிட்டன. எப்போதாவது சாட்சிகள் பல்டி என ஒரு செய்தியைப்போட்டு விட்டு போய்க்கொண்டே இருக்கின்றன.

ஆனால் கொலை செய்யத் தூண்டுதல் (இபிகோ 302) கூட்டுச் சதி (120பி) பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் (34) கொலை (201) போன்ற கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு அதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு , குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு ஜெயேந்திரர் 61 நாட்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையிலும், விஜயேந்திரர் 31 நாட்கள் சென்னை மத்தியச் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது பற்றியோ, இந்த வழக்கிலுள்ள நியாய தர்மங்கள் பற்றியோ அவை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

சங்கரராமன் குடும்பத்தினர் காலங்காலமாக சங்கரமடத்தில் சேவை செய்து வந்தவர்கள். ஜெயேந்திரரும் விஜெயேந்திரரும் காவியை போர்த்துக்கொண்டு மடத்தில் அடிக்கின்ற கொள்ளைகள், காம கூத்துகள் தொடர்பில் சங்கரராமன் பெரும் அதிருப்தியை கொண்டவராக இருந்து வந்திருக்கிறார். இது தொடர்பில் சோமசேகரகனபாடிகள் எனும்பெயரில் காவல்துறை, பத்திரிகைகள், வருமான வரித்துறை,அறநிலையத்துறை போன்றவற்றுக்கு அடிக்கடி ஆதாரங்களுடன் புகார் கடிதங்களை எழுதி வந்திருக்கிறார். ஆனால் பிராமண சக்தியின் சர்வ வல்லமையை உணர்ந்தவர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லை.

பின்னர் இறுதி எச்சரிக்கை என ஜெயேந்திரரின் கொள்ளைகள் காம லீலைகள் தொடர்பில் ஒரு கடிதத்தை எழுதி தன் சொந்தப்பெயரிலேயே ஜெயேந்திரருக்கு அனுப்பிஇருக்கிறார். அந்தக் கடிதத்தை அனுப்பிய மூன்று நாட்களிலேயே அவர் கூலிப்படையால் கொல்லப்பட்டார். ரவி சுப்பிரமணியம், அப்பு போன்ற சிலரின் உதவியுடன் இந்தக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சங்கரராமனை கொல்லும்படி ஜெயேந்திரர் உத்தரவிட்டது முதல் திட்டம் தீட்டப்பட்டு கொலை நிகழ்த்தப்பட்டது வரை அரசதரப்பு சாட்சியாக மாறிய ரவி சுப்பிரமணியம் அளித்த 20 பக்க வாக்குமூலத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயேந்திரர் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு வாங்கிக்கொடுத்தது, சொர்ணமால்யாவின் கணவரை மிரட்டி விவகாரத்து வாங்க வைத்தமை முதல் ஹார்லிக்ஸ் ஷர்மிளா, லீலா ,சீரங்கம் உஷா, பிரேமா, பத்மா போன்ற பல பெண்களுடனான ஜெயேந்திரர் கொண்டிருந்த தகாத காம உறவுகள் வரை ரவி சுப்பிரமணியம் அந்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விஜெயேந்திரர் அவரது தம்பி ரகு போன்றோரின் பண, நகை, நில கொள்ளைகள், சங்கர மடத்திலேயே இடம்பெற்ற விபசார நடவடிக்கைகள் என்பவற்றையும் ஜெயேந்திரரின் வலது கையாக விளங்கிய ரவி சுப்பிரமணியம் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதுதவிர தனது கணவரின் கொலை குறித்து தமிழக பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவித்திருந்த சங்கரராமனின் மனைவி பத்மாவும் குடும்பத்தினரும் ஜெயேந்திரரே இந்த கொலையின் பின்னணியில் இருப்பதை மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்ததுடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஏற்கனவே பலதடவைகள் ஜெயேந்திரரின் சகாக்கள் நள்ளிரவுகளில் சங்கரராமனின் வீட்டில் நுழைந்து மிரட்டியும் வீட்டை உடனே காலி செய்யுமாறும் எச்சரித்தும் வந்திருந்தனர்.

இது எதுவும் கண்டு கொள்ளப்படாத நிலையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக புதுவை நீதிமன்றில் இடம்பெற்ற குறுக்கு விசாரணையின் போது சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்திரேயி ஆகியோர் ஏற்கனவே காஞ்சிபுரம் நீதிமன்றில் அளித்த வாக்குமூலத்தில் இருந்து மாறி சாட்சியமளித்தனர். அதற்கான காரணத்தை நிர்பந்தத்தை யாரும் அறிவர்.

''காவ‌ல்துறை‌யின‌ர் காட்டிய புகைப்படங்களை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம்'' எ‌ன்று‌ம் ''எங்கள் வீட்டிலிருந்து காவ‌ல்துறை‌யின‌ர் எடுத்து வந்த கடிதம் சங்கரராமனின் கையெழுத்து இல்லை...இந்த கடிதத்தை இப்போதுதான் பார்க்கிறோம் எ‌ன்று‌ம் கொலை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது'' எ‌ன்று‌ தெரிவித்ததாக வெட்கமில்லாமல் தமிழக பத்திரிகைகளும் இதழ்களும் செய்தி வெளியிட்டன. இங்கு நடந்திருக்கக்கூடிய ஊழல், மிரட்டல், உயிர் அச்சுறுத்தல், சங்கர மடத்தின் கொடூரம் பற்றி பத்திரிகைகள் மட்டுமல்ல வேறு எந்த அமைப்புகளும் கூட கவனத்தில் கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

இதே போல் ஆனந்த கிருஷ்ண தர்மா, காசாளர் கணேஷ் நேரடி சாட்சிகளான கணேஷ் குப்புசாமி துரைக்கண்ணு எனத்தொடங்கி இப்போது வரை 26 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் கொலை கொள்ளை காம வெறியாட்டம் என சகல குற்றங்களையும் செய்த ஜெயேந்திரரும் காவிக்கும்பலும் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படப்போகிறார்கள். சுமார் பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துக்களை கொண்ட சங்கர மடம் மீண்டும் ஒருமுறை தனது பலத்தை பிராமணிய வெற்றியை நிருபிக்கப்போகிறது. இளிச்சவாயர்களான தமிழர்கள் நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டே வழமைபோல தோற்கப்போகிறார்கள் . தமிழனின் தலை எழுத்தை யார்தான் மாற்றமுடியும்?

(அதுசரி ஜெயேந்திரர் செய்த குற்றங்களைத்தானே பிரேமானந்தாவும் செய்தார். அவருக்கு ஆயுள் தண்டனை . பிராமணன் என்பதால் ஜெயேந்திரருக்கு விடுதலையா என்று மட்டும் நீங்கள் பின்னூட்டத்தில் கேட்கவேண்டாம்).

சென்னையிலிருந்து - இரா. வெங்கட்மணி

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Jeevendran

18 comments:

Ashok D said...

மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம். ஏற்ற தாழ்வுகள் எல்லா இடத்தலயும் உண்டுங்க... மெல்ல மெல்ல தான் மாறும் இல்ல நாம் மாறிடனும்

வினவு said...

நினைவுபடுத்த வேண்டிய பதிவு.

ஜீவேந்திரன் said...

நன்றி வினவு

Anonymous said...

மாறி சாட்சி அளித்தார்கள்... காரணம் தெரியவில்லை என்கிறீர்களே... உண்மையில் காரணம் தெரியவில்லையா.. நீங்க சொல்றது புரியவில்லை.. காரணம் தெரியவில்லையா...? காரணம் தெரியவில்லையா...? நன்றாக யோசியுங்கள்..ம்ம் அட நல்ல யோசிங்கப்பு....இன்னமும் தெரியவில்லை என்றால் உங்களை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது

ஜீவேந்திரன் said...

நன்றி திரு.ருத்ரன். உங்களுடைய ருத்ரனின் பார்வை மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

அப்பாவி said...

முரண்பட்ட கருத்துக்கு மன்னிக்கவும். முதலில் நான் பிராமணன் இல்லை.
இந்திய சட்ட திட்டங்கள் மிக சரியாக வரையறுக்க பட்டுள்ளது.ஆம், பணம் படைத்தவருக்கும், அதிகாரம் படைத்தவருக்கும், அதிகாரம் படைத்தவர்களை ஆட்டி படைப்பவருக்கும் தனி நீதி என்று.அங்கே ஜாதி என்ற ஒரு சொல் மிக சொற்ப அளவுலே பயன்படுத்த படுகிறது. அவர்கள் செய்து இருக்கும் அயோக்கியதனங்கள், வகிக்கும் பதவி மற்றும் அவர்களிடத்தில் உள்ள பணம் ஆகியவை, அங்கே, அவர்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்த்தை, பாதுகாப்பை நிர்ணயக்குது மற்றும் கொடுக்கிறது.இதற்கு உதாரணமாக, சிறுமியை பலாத்காரம் செய்து, சிரித்த படி வெளியே வந்து கை அசைத்த மாஜி போலீஸ் அதிகாரி, மூன்று பத்திரிகையாளர்களை கொலை செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள், அனைவரும் விடுதலை செய்யப்பட்டது.இன்னும் நிறைய இருக்கிறது. அவர்கள் எல்லாம் என்ன பிராமணர்களா? ஒரு பிராமணன் இப்படியெல்லாம் செய்ய மாட்டன், என்ற நாம் நம்பிக்கை பொய்த்து போனதால் வந்த அங்கலாய்ப்பு. ஆரம்பத்திலிருந்தே அவர்கள் safe place எனப்படும் ரெண்டாவது இடத்தில் தங்களை புகுத்தி கொண்டார்கள், அந்த இடம் Divide and Rule செய்ய அருமையான இடம்.முதலில் கடவுளுக்கும் மனிதர்க்கும் இடையில், அப்படியே வளர்ந்து,அதிகாரம் படைத்தவர்களுக்கும், மக்களுக்கும் இடையில் வந்தார்கள். அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் ஒரு மிருகம்தான், அதில் ரெண்டே வகை, ஒன்று வாய்ப்பு கிடைத்தவன், ரெண்டாவது, வாய்ப்பு கிடைக்காதவன். இதில் பிராமிணன் என்ன? வேறு ஜாதி என்ன? பிராமிணர்களின் மீதான நம் (தவறான)நம்பிக்கை பொய்த்து போனதால், அவர்களின் உண்மையான குணம் தெரிந்து கொண்டதால், ஒன்றுமே செய்ய முடியாதால் வந்த ஆத்திரம் இது. இது அவர்களால் பாதிக்கப்பட்ட, அவர்களை புரிந்து கொண்ட அனைவருக்கும் இருக்கும். ( மேலும் வருகிறேன், நேரம் இருக்கும்போது) நன்றி ஐயா..

அப்பாவி said...

I am getting error while posting comments.Did you received my earlier comments sir?

ஆராய்வு said...

அன்பின் அப்பாவி எல்லோருமே ஒரேமாதிரியான கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. பல்வேறான கருத்துக்கள் இருந்தால்தான் கருத்தாடலுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கருத்து மிகவும் பெறுமதி வாய்ந்தது தொடர்ந்து எழுதுங்கள். தயவு செய்து ஐயா என்று அழைக்காமல் நண்பராக கொள்ளுங்கள். அது போல காத்திரமான கருத்துக்களை கொண்டிருக்கின்ற நீங்கள் உங்களது உண்மையான பெயரில் எழுதும்படி கேட்டுகொள்கிறேன்.

அப்பாவி said...

நாங்கள் சிவன் அடியார்கள், எங்களுக்கு எல்லோருமே மேலானவர்கள்,எல்லோருமே ஐயா தான். நாங்கள் நாயினும் கடையாய் கிடப்பவர்கள்.தான் என்ற எண்ணம் அகன்று, நாயை விட கேவலமானவன் என்ற உண்மையை உணர்ந்தவர்கள். திருவாசகத்தில் வருமே "நாயினும் கிடையாய் கிடந்த அடியேனுக்கு, தாயினும் சிறந்த தயாவான தத்துவனே" அது உண்மை என்று உணர்த்த பட்டவர்கள். நன்றி ஐயா...

yohappriya said...

அப்பாவி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி? சரி உங்களின் பெயரில் எழுதலாமே? அடியாருக்கு ஏன் இந்த முகமூடி?

அப்பாவி said...

முதலில் ஜாதிகள் எப்படி உருவாகின? எதற்கு உருவாகின? மனிதர்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, அவர்களே சிறு சிறு குழுவாக பிரிந்து பொறுப்புகளை சுமந்தார்கள். A habit become character என்ற பரிணாம கொள்கையின் படி, அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அவர்களுடைய குணம் தானாகவே மாற்றப்பட்டது.அந்த குணநலன்களை நிர்ணயிப்பதில், அவர்கள் வாழ்ந்த நிலமும்,( ஒவ்வொரு நில பகுதிக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு.அது மனிதர்களின் குணத்தை நிர்ணயிப்பதிலும்,மாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிகிறது ) சூழலும் பங்கு வகித்தது. அந்த குழுவை அடையாளம் கண்டுகொள்ள ஒரு பெயர் ஏற்படுத்தப்பட்டது.அதுவே ஜாதியானது.அதன் பிறகே அந்த அந்த ஜாதிக்குரிய குணநலன்கள் நிர்ணயிக்கப்பட்டது.பின்பு அது ஒரு எல்லையாகவே மனிதர்களுக்குள் ஏற்பட்டுவிட்டது. அவர் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அவர்கள் உணவு பழக்க முறையும் ஏற்பட்டது. அது ஜாதிக்குரிய உணவு பழக்கமாக மாறிவிட்டது. நாம் மிருகத்தில் இருந்து தோன்றியதால், அந்த குணம் எப்போதும் நம்மிடம் உண்டு, ஆகவே, அந்த சிறு குழுவில் சச்சரவு ஏற்பட்டு, பல பிரிவுகள் ஆனது, அதுவே ஜாதியின் உட்பிரிவு ஆனது.

ஆம் எப்படி பிராமிணர்கள் உயர்ந்த ஸ்தானத்தை பிடித்தார்கள்? உலகத்தின் எல்லா பகுதிகளிலும் மனித இனம் தோன்றிட்டு. இவர்கள் வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் பிறந்த மண்ணின் அமைப்பு ,அதிர்வு, அவர்களுக்கு அந்த Divide and Rule குணத்தையும், கல்வி கற்கும் அறிவையும் கொடுத்தது. இங்கு பிறந்த மக்களுக்கு அந்த குணம் இல்லாதலால், அவர்களை புரிந்து கொள்ள தெளிவு இல்லாதலால், அப்படியே அவர்களை ஏற்றுகொண்டார்கள். இதுவே சரியான தருணம் என்று , கடவுளுக்கு என்று தனி மொழி இருக்கு, அது எங்களுக்கு மட்டுமே தெரியும், நாங்கள் கடவுள்இடம் பேசி, உங்களுக்கு வேண்டியதை செய்கிறோம் என்று, மாமன்னர்களே, வீழ்த்து வணங்கும்,கடவுளை காப்பாற்றும் பொறுப்பை கை பற்றினார்கள்.
வளைகின்ற முள்தான் காலில் குத்தும் என்று நன்றாக அறிந்தவர்கள்,பணிவாக இருப்பதை போல் நடிப்பார்கள், யாரையும் பகைத்து கொள்ள மாட்டார்கள், தன் காரியத்தையும், அடுத்தவனை செய்ய வைப்பார்கள், அவர்களின் தனிப்பட்ட எதிரியை, அனைவருக்கும் பொது எதிரி ஆக்கிவிடுவார்கள். அப்பாவி போலவே நடிப்பார்கள், எனக்கு என்ன தெரியும், இந்த வேலையை விட்டா? என்று பரிதாபத்தையும் தேடி கொள்வார்கள். தனக்கென்ற சரியான சுழல் அமையும் வரை, தன் பலத்தை காட்ட மாட்டார்கள்.
இந்த குணநலன்கள் நம்மில் இல்லாததால், அவர்களுடன், நாம் யாரும் போட்டி போட வில்லை. அவர்களும் எந்த போட்டியாளர்களும் உருவாகாமல் பாத்துகொண்டார்கள்.
இதில் தேவனாதனை பாராட்டலாம், கடவுள் கோயிலில் இல்லை ஒவ்வொருத்தர் மனதில்தான் உள்ளார் என்பதை புரிந்தவன்.திருமந்திரத்தை தெளிவாக படித்தவன் போல, "உள்ளமே பெரும் கோவில் , ஊனுடம்பே ஆலயம் "( மேலும் வரும் )

அப்பாவி said...

சாதரணமான மனிதர்கள் பலர் , இறைவனை முழு ஈடுபாட்டுடன் சேவித்து,சில மந்திரங்களை கற்று,உச்சரித்து தியானம் செய்து,இறைவனை உணர்ந்து சமாதி நிலையை அடைந்திருக்கிறார்கள், ஆயிரம் மந்திரங்களையும், ஆகமத்தையும் அறிந்து அதை சொல்லும் இவர்களில் ஒருவர் கூட அந்த அதீத சக்தியை, நிலையை அடையவில்லையே, ஏன்?
ஒருவன் தியானத்தில் அமர்ந்து, காயத்ரி மந்திரந்தை, முழு ஈடுபாடுடன் தினமும் 1008 தடவை உச்சரித்து, தொடர்ந்து 40 நாட்கள் செய்வானால், தியானத்தில் பிரமிக்கதக்க நிலையை அடைய முடியும். நாள் முழுதும் அதையே சொல்லும் இவர்கள் ஏன், தன்னை உணர்ந்த நிலையை அடைய வில்லை? ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன். ( அந்த நிலையை அடைந்தால் பெண்களை ஒரு போக பொருளாக பாக்க முடியாது, ஏன் என்றால், அந்த நிலையில் Live subject என்பது மாறி, எல்லாமே ஒரு object நிலையில்தான் உணர்வோம்) எல்லாரும் போதும், போதும் என்று சொல்வது மிக தெளிவாகவே கேட்கிறது. நன்றி எல்லோருக்கும் .. நன்றி ஐயா...

Unknown said...

அப்பாவி, அடப்பாவி.
//ஒருவன் தியானத்தில் அமர்ந்து, காயத்ரி மந்திரந்தை, முழு ஈடுபாடுடன் தினமும் 1008 தடவை உச்சரித்து, தொடர்ந்து 40 நாட்கள் செய்வானால், தியானத்தில் பிரமிக்கதக்க நிலையை அடைய முடியும்//

தியானத்தில் பிரமிக்க தக்க நிலையை அடைந்து??? ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பித்து இப்படி சொதப்புரீரே! யாரு மடையன் சொன்னது? ஏதாவது ஆதாரம் உண்டா இதற்கு.

Anonymous said...

அப்பாவி நீங்க இவ்வளவு நல்லவரா இருக்குறீங்க...அப்புறம் ஏன் முக மூடியை மாட்டிகிட்டு வாறீங்க..? படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் அப்படின்றது இதுதானா? தியானம் , காயத்ரி மந்திரமெல்லாம் இருக்கட்டும் முதல் உண்மையா, நேர்மையா இருக்க பாருங்க ஐயா.

அப்பாவி said...

அன்புள்ள Anonymous ஐயா அவர்களுக்கு,
உண்பதும் உறங்குவதும், புணர்வதும், பின்பு எழுவதும்,பன்றியும் செய்யும் பரதேசிமகனே..... ஐயா, நான் சொல்லவில்லை
பட்டினத்தார் பாடியது... பாவம் நீங்க அந்த வாழ்கையில் நிலை கொண்டுஇருக்கீறீர்கள்.
பாவம் யாரு பெத்த பிள்ளையோ, பிறந்து இவ்வளவு வருசம் ஆகியும்,இன்னும் ஒரு புனை பெயர் கூட வைக்கவில்லையே?பெயர் என்றால் என்ன? அது எதற்கு? ஒருவனை தனித்து அடையாளம் காண்பதர்க்குதான்.உண்மையிலேயே நான் ஒரு அப்பாவி தான். அதான் இந்த பெயர்.இந்த பெயரையே தாங்கள் என் அடையாளமாக கொள்ளலாம்.நன்றி Anonymous ஐயா.

அப்பாவி said...

அன்புள்ள கந்தன் ஐயா..
மிகுந்த போதையில் இருந்தேன், ராஜ போதையில் இருந்தேன், என்பதை மற்றவர்களுக்கு, வார்த்தையில் புரியவைக்க முடியுமா? முடியாது, ஏன் என்றால் அது உணர மட்டுமே கூடியது,
வார்த்தையில் அதை வரைமுறை படுத்த முடியாது.தியானமும் அதுபோலதான், மனிதன் உயிரோடு இருக்க அடிப்படை காற்று,சுவாசம் மட்டுமே. அந்த சுவாசத்தை முறைபடுத்தி, நிலைபடுத்தி கொண்டால், அது நம்முள் , Constant vibration ய் ஏற்படுத்தும்.அந்த vibration நம்முள் ஒரு பரவச நிலையையே ஏற்படுத்தும்.அந்த முறை படுத்தத்தில் ஒருவகை தான் மந்திரத்தை உச்சரிப்பதும்.
இதில் காயத்ரி மந்திரம் என்ன பங்கு என்கீறீர்களா?
சும்மா, ஒரு நாள் night இல்ல அதிகாலையில், சாதாரணமாக தரையில் அமர்ந்து, முதுகு தண்ட நேரா வச்சி, ஒரு 20 தடவ சொல்லி பாருங்க.உச்சி மண்டையில சுர்ருன்னு இருக்கும். சும்மா try பண்ணுங்க.காயத்ரி மந்திரம் is the most powerful mantra. அந்த மந்திரத்தை சொல்ல சொல்ல, அது உங்களுக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தும். இதெல்லாம் அனுபவிக்க வேண்டியது... அனுபவிச்சு பாருங்க கந்தன் ஐயா..

அப்பாவி said...

yohappriya அம்மணி,சிவன் அடியார் என்றதும், திருநாவுகரசர் படத்தில் வரும் சிவாஜி கணேசனை நினைவில் கொள்ளவேண்டாம். jeans போட்ட youth துதான் நாங்க.
என்ன, புலன்களால் உணரப்பட்டு, நுகரப்பட்டு, அனுபவிக்கும் வாழ்க்கையை சற்று தெளிவுபடுத்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இது முகமூடி அல்ல, இதுவும் ஒரு அடையாளம் தான்.

அப்பாவி said...

அன்புள்ள ஆராய்வு ஐயா அவர்களுக்கு, என் பிதற்றல்களை, எந்த மாற்றங்கள் இன்றி வெளிஇட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் மதிப்பீடுகளை மிக்க மதிப்போடு எதிர்பாக்கின்றேன்.நன்றி ஐயா.

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.