Thursday 11 February 2010

நீலப்படமும் சாரு நிவேதிதாவும்

அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. அதை வாசிக்கும் போது ஒரு எழுத்தாளனால் இவ்வளவு கேவலமாக எழுத முடியுமா என்றுதான் நினைத்தேன் (இந்தாளை நிறையப்பேர் எழுத்தாளன் என்று சொல்வதில்லை 'அரிப்பெடுத்த ஒரு லூசு' என்றுதான் சொல்கிறார்கள்). இவர் கமல்ஹாசனைப்பற்றியும் இளையராஜவைப்பற்றியும் கேவலமாக எழுதும் போதெல்லாம் இந்தாள் ஒரு மன நலம் சரியில்லாதவர் என்றே எனக்கு தோன்றியிருக்கிறது. அப்போதெல்லாம் இந்தாளுக்கு மறுப்பெழுத நினைத்ததுண்டு...ஆனால் போனால் போகட்டும் லூசு என்று வாளாவிருந்தேன்.

இவரைப்போன்ற சிலர் பிரபலங்களை திட்டி எழுதி பிரபலமாக நினைக்கிறார்கள். பிரபலங்களை பற்றி ஏதாவது வேண்டுமென்றே சர்ச்சையாக எழுதிவிட்டால் வாசகர் வரவு அதிகரிக்கும் என்பது சாரு நிவேதிதா போன்ற பன்னாடைகளின் தந்திரம்.(அல்லது இருக்கவே இருக்கிறாரே இந்து தீவீரவாதி ஜெயமோகன்..அவரைப்பிடித்துக்(கொல்வார்) ) இது ஒரு சாபக்கேடு. கமல்ஹாசன் ’தலைவன் இருக்கிறான்’ என்ற பெயரை மாற்றி உன்னைப் போல் ஒருவன் என்று வைக்க காரணம் தனது விமர்சனம்தானாம் என்கிறார் சாரு. தனது தளத்தை வாசித்து விட்டு (பயந்து போய்) படத்தின் பெயரை மாற்றிவைத்தாராம் கமல்.(இது என்ன கொடுமை? சுய புகழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? )

சாரு நிவேதிதாவிடம் தரமான படங்கள் என்றாலே அது ஹொலிவூட் படங்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை ஹொலிவூட் புராணந்தான். ஆனால் அமெரிக்காவில் தயாராகும் முக்கால்வாசிப்படங்கள் குப்பை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவதார் போல ஒருசில படங்கள் வந்து உலகை கலக்குவதால் சாருவுக்கு அந்த பிரமை ஏற்பட்டு இருக்கலாம்.

ஆனால் அமெரிக்காவுக்கு வெளியேதான் உலகின் மிகச்சிறந்த திரைப்படங்கள் வெளியாகின்றன. ஈரான்,கொரியா, இலங்கை(சிங்களம்), ஜப்பான் , சீனா, பிரான்ஸ் போன்ற இன்னும் எத்தனையோ கவனிக்கப்படாத நாடுகளில் வெளிவந்த திரைப்படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பரிசுகளை அள்ளிச்செல்கின்றன. அமெரிக்க படங்களுக்கு பரிசு கொடுக்க அமெரிக்காவின் ஒஸ்காரை விட்டால் வேறு கதி இல்லை. அமெரிக்காவின் உலக வர்த்தக பலத்துடனான தயாரிப்பு சக்தியை வைத்துக்கொண்டு தமிழ் படங்களை விமர்சனம் செய்கின்ற சாரு நிவேதிதா தான் ஒரு கூமுட்டை என்பதை காட்டிவிடுகிறார் .

//நான் சோழர் குலப் பெருமை பேசும் வீரத் தமிழன் இல்லை; ஆனால் சோழர்கள் மேற்கே தென்னாஃப்ரிக்காவை ஒட்டியுள்ள தீவுகளிலிருந்து கிழக்கே கம்போடியா வரை தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியவர்கள். அவர்களைத்தான் இப்படிக் காட்டுமிராண்டிகளைப் போல், நர மாமிசம் தின்பவர்களாகக் காட்டியிருக்கிறார் ஒரு தமிழ் இயக்குனர். பாரம்பரியப் பெருமை கொண்ட ஒரு இனத்தின் மீதே சேற்றை வாரி இறைத்து விட்டு, டைட்டிலில் சோழர், பாண்டியர் குல வரலாற்றுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போட்டு விட்டால் ஆயிற்றா..//' என்கிறார் சாரு நிவேதிதா.

ஒரு திரைப்படம் கட்டாயம் வரலாற்று உண்மைகளையும், சரித்திர ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வாறு சரித்திர ஆய்வுகளின் அடிப்படையில் தயாராகின்ற எத்தனையோ படங்கள் இருகின்றன. ஆனால் புனைகதைகளின் அடிப்படையில், கற்பனைகளின் அடிப்படையில் கடந்த காலத்தில் நடந்தாக ஒரு திரைப்படம் வெளிவரக்கூடாதா?

ஒரு இயக்குனரின் படைப்பாளியின் கற்பனையை சாரு நிவேதிதா கட்டுப்படுத்த நினைப்பது சர்வாதிகாரமில்லையா?

இதைவிடக்கொடுமை எதுவென்றால், எழுத்துலகில் மிக கேவலமான காமவெறிபிடித்த எழுத்தாளராக காறித்துப்பப்படும் சாரு நிவேதிதா ஆயிரத்தில் ஒருவன் பற்றி இப்படி சொல்கிறார்-

//ஏற்கனவே வன்முறையும், பாலியல் விபரீதங்களும் மிகுந்த நமது தமிழ் சமூகத்தில் இது போன்ற படங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். குறிப்பாக இந்தப் படத்துக்கு வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்கின்றனர். ” என் கிட்ட ’ காண்டம் ’ இருக்கு; படுத்துக்க வர்றியா? ” என்று ஆண்ட்ரியாவிடமும், ரீமா சென்னிடமும் கேட்கிறார் கார்த்தி. ஒரு காட்சியில் அதே கார்த்தியை மல்லாக்கப் போட்டு அவருடைய இரண்டு பக்கத்திலும் அந்த இரண்டு பெண் பாத்திரங்களும் குப்புறப் படுத்த நிலையில் ஏறிக் கொள்கின்றனர். காட்டில் குளிர்கிறதாம். இவ்வளவுக்கும் ரீமா சென் பேண்டீஸை விட கொஞ்சம் பெரிதான நிக்கர்தான் அணிந்திருக்கிறார். அப்படியே அவர் தன்னுடைய பச்சைத் தொடைக்கறியை கார்த்தியின் மல்லாந்த உடம்பில் போட்டு அழுத்தும்போது திரை அரங்குகளில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. ’ காண்டம் இருக்கிறது; செய்யவா? ’ என்று கேட்ட கார்த்தி அந்த இனிய வாய்ப்பை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஐயம் கார்த்திக்கு எழுந்ததோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் எழுந்தே இருக்கும். இப்படி படத்தின் முதல் பாதி முழுவதும் நீலப்படமாக (Threesome) இருக்க , இரண்டாவது பாதியை பைத்தியக்காரனின் உளறல் என்று சொல்லலாம். //

இதை எழுதின விதத்தை பாருங்கள் //கார்த்தியை மல்லாக்கப் போட்டு....// ... //ரீமா சென் பேண்டீஸை விட கொஞ்சம் பெரிதான நிக்கர்தான் அணிந்திருக்கிறார்//....//பச்சைத் தொடைக்கறியை கார்த்தியின் மல்லாந்த உடம்பில் போட்டு அழுத்தும்போது// ... படத்தை பார்த்த யாருக்கும் இவ்வளவு கேவலமான எண்ணங்கள் தோன்றியிருக்குமா? அல்லது எழுதியிருப்பார்களா? போதாதற்கு இன்னும் சொல்கிறார்-

//இந்த இடத்தில் இன்னொரு பிரச்சினை. ஆயிரத்தில் ஒருவனில் இது போன்ற ஏராளமான கிளுகிளு காட்சிகள் தணிக்கைத் துறையினரால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான் முதல் நாள் பார்த்த போது இருந்த இந்த உலகத்தரமான காட்சி மறுநாள் அதே திரையரங்கில் பார்த்தபோது நீக்கப்பட்டிருந்தது. செல்வராகவனே கால் மணி நேரப் படத்தை நீக்கி விட்டதாக பேட்டி அளித்துள்ளார். ஆனால் ரீமா சென் நிர்வாணமாக நின்று மூத்திரம் அடிக்கும் இந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்கியது செல்வராகவனா, அல்லது அந்தத் தியேட்டர் ஆபரேட்டரா என்று தெரியவில்லை//

படம் சரியில்லை என்றால் இரண்டாவது தடவை ஏன் போனார்?? அதிலும் -'ரீமா சென் நிர்வாணமாக நின்று மூத்திரம் அடிக்கும் இந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்கியது செல்வராகவனா, அல்லது அந்தத் தியேட்டர் ஆபரேட்டரா என்று தெரியவில்லை' -என்ற கோபம் வேறு(ஆசையாக எதிர்பார்த்து போனவருக்கு கோபம் வராதா என்ன?).

அடுத்ததாக சொல்கிறார்-

//நீலப் படங்களில் fetish என்ற ஒருவகை படம் உள்ளது. அதில் சிறுநீரைக் குடிப்பார்கள். இன்னும் அதுபோல் கற்பனைக்கே எட்டாதபடி கண்ட கண்ட கண்றாவியெல்லாம் வரும். அந்த fetish ரக நீலப் படங்களை ஞாபகப்படுத்தும் பல காட்சிகள் ஆயிரத்தில் ஒருவனில் உண்டு. செல்வராகவன் ஆங்கிலப் படங்களுக்கு இணையான தரம் என்று இதைத்தான் சொல்கிறார் என்று கருதுகிறேன்//

இந்த கண்றாவி எல்லாம் வருவது இவருக்கு எப்படி தெரியும். இந்த மாதிரியான fetish வகை படங்களையும் நீலப்படங்களையும் பார்த்துவிட்டுத்தான் சாரு நிவேதிதா தனது எழுத்துகளில் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

அது போகட்டும் என்று விட்டால் திடீர் என்று இலங்கைப்பிரச்சனைக்கு தாவுகிறார்.

//ஆயிரத்தில் ஒருவன் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் இடையில் பிரபாகரனின் மரண சம்பவம் வேறு நிகழ்ந்து விட்டதால் கதை திடீரென்று பாதை மாறி இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பக்கம் நகர்ந்து விடுகிறது. புலிக்கொடி தாங்கிப் போராடும் சோழர்கள் புலிகள். அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம். புலிகளைக் கொன்று குவித்து, அவர்களின் பெண்களைக் கற்பழிக்கும் இந்திய ராணுவம். என்ன ஒரு வரலாற்றுப் பார்வை! இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்றால், விடுதலைப் புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது? //

இப்படி செல்வராகவனின் வரலாற்று பார்வை பற்றி குறைகூறும் சாரு நிவேதிதா ஈழப்போராட்டம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? //இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான்//

ஈழப்போராட்டம் ஆரம்பமானது எப்போது...? இந்திய இராணும் வந்தது எப்போது...? இந்திய இராணும் கற்பழித்தது வடகிழக்கு தமிழ் பெண்களையே தவிர சிங்கள பெண்களை அல்ல. இந்த சாதாரண அறிவு கூட இல்லாமல் எழுதுகின்ற சாரு நிவேதிதா செல்வராகவனின் வரலாற்று பார்வை பற்றி பேசுவதை பார்க்கும் போது வாயடைத்துப்போகிறோம்.

அதுமட்டுமல்ல அவர் ஆடை வடிவமைப்பாளரையும் கூட விட்டு விடவில்லை...

//இந்தப் படத்தில் பாராட்டக்கூடிய அம்சங்கள் என்று ஆடை வடிவமைப்பாளர் (எரும் அலி) மற்றும் பார்த்திபனின் நடிப்பைச் சொல்லலாம். ஆனால் ஆண்ட்ரியாவைத் தவிர படத்தின் மற்ற இரண்டு பிரதான பாத்திரங்களான கார்த்தியும் ரீமா சென்னும் ஜட்டி பனியனிலேயே நடித்திருப்பதால் எரும் அலியை பாராட்ட முடியவில்லை// திரும்ப திரும்ப சுப்பனின் கொல்லைக்குள்ளேயே (ஜட்டிக்குள்ளேயே) சுத்துகிறார் மனுஷன்.

ஒரு மொடாக்குடிகார, மற்றவர்களின் எழுத்தை திருடி தனது பெயரில் போட்டுக்கொள்கின்ற, சமூக நோக்கமற்ற, கீழ்த்தரமான காமத்தை வலிந்து புகுத்தி வாசகர்களை கவர நினைக்கின்ற, பொது இடங்களில் கூட ரௌடி போல நடந்தது விளம்பரம் தேடுகின்ற, தனக்கு போட்டியென்று நினைக்கும் எழுத்தாளர்கள் மீது தனிப்பட்ட வசைபாடல்களை செய்து அதிலும் விளம்பரம் தேடுகின்ற, ஒரு மூன்றாந்தர மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளரிடமிருந்து வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்?

(அதற்காக ஆயிரத்தில் ஒருவன் சிறந்த படம் என்று நான் சொல்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்)

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

ஜீவேந்திரன்

Jeevendran

23 comments:

Anonymous said...

100% agreed with this article

Anonymous said...

charu latha is utter waste....but someone has to be there to write....healthy fight...

அப்பாவி said...

சினிமாவிற்கு ஒரு கடிவாளம் தேவை .. அது இவராக இருக்கட்டுமே .....விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல சினிமா . நடிகர், நடிகைகளை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும் என்பது , இந்த தமிழர்களின் தலை விதி..

அப்பாவி said...

சாக்கடை குவியலில் நின்று , அதில் எந்த பொருள் , நல்ல பொருள் என்று ஆராய்வீர்களா? யார் எழுதீர்கள் என்பது முக்கியமல்ல, கருத்து மட்டுமே முக்கியம், சினிமா ஒரு சாக்கடை என்கிறார், அது உண்மைதான். தமிழர்களின் எதிர்காலமே சீரழிந்து கொண்டுஇருக்கிறது இந்த சினிமாவால். ஒருவன் சுகவாசியாக வாழ பல இளஞ்சர்களின் எதிர்காலம் , ரசிகர் மன்றம் என்ற பெயரில் சீரழிந்து கொண்டுஇருக்கிறது.முதலில் இந்த ரசிகர் மன்றங்களை தடை செய்ய வேண்டும் .
சாருவிற்கு , சினிமா பற்றி சொல்ல தகுதி இல்லை என்று நீங்கள் கருதுகீர்களா? எந்த தகுதி இல்லாதவன்தான் சினிமாவில் உள்ளார்கள், அதை பற்றி பேசுவதற்கு, யாருக்கும், எந்த தகுதியும் தேவை இல்லை. இந்திய போன்ற உழைப்பு தேவை படும், வளரும் ஏழை நாடுகளுக்கு, சினிமா அவசியமில்லாதது.தடை செய்ய பட வேண்டியது.

Anonymous said...

excellent one...avan oru vakkiram pudichcha naayinga...kaththukutti payalunga avanukku kai thatti visil adikkiraanunga..atha vachikkittu loosu maathiri thiriyuraan...

டவுசர் பாண்டி... said...

ஏன் இந்த கொலைவெறி !

சாரு ஒரு எழுத்து யாவாரி!, சரக்கு சந்தையில் விலைபோக தேவையான யாவார தந்திரங்களை கடைபிடிக்கும் ஒரு வர்த்தக ஆசாமி. அந்த அளவில் மட்டுமே அவரின் கருத்துக்களை எடுத்துக்கங்க...

Rajan said...

நம்ம ஏரியாவுக்கு வாங்க !

http://allinall2010.blogspot.com/

PPattian said...

கொலவெறியில இருக்கீங்க போல :)

ஒரு கட்டுரையில் வரலாற்றுத் திரிப்புகளை கட்டாயம் ஏற்க முடியாது.

ஆராய்வு said...

அன்பின் அப்பாவிக்கு,
நான் என் மனைவியை தினமும் அடித்து நொறுக்கிக்கொண்டு உங்களிடம் பெண்ணுரிமை பற்றி பேசினால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா?
தானே மிகவும் கீழ்த்தரமான காமத்தை, வக்கிரத்தை, கிளுகிளுப்பாக, கிசு கிசு பாணியில் எழுதிக்கொண்டு // ஏற்கனவே வன்முறையும், பாலியல் விபரீதங்களும் மிகுந்த நமது தமிழ் சமூகத்தில் இது போன்ற படங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்// என்று சாரு விமர்சனம் எழுதினால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஆராய்வு said...

அன்பின் புபட்டியன்,
//ஒரு கட்டுரையில் வரலாற்றுத் திரிப்புகளை கட்டாயம் ஏற்க முடியாது// என்று கூறியிருக்கிறீர்கள். அதை கொஞ்சம் விளக்கினால் நல்லது. (சாரு இலங்கை விடயம் பற்றி எழுதியதைத்தான் சொல்கிறீர்களா???)

Unknown said...

//இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான்//

இது கூடத் தெரியாதவனையெல்லாம் எழுத்தாளர் என்று ஏங்க சொல்றீங்க... அவன் ஒரு மனுசனே இல்லை.
மத்தபடி கட்டுரை சூப்பருங்க ஜீவேந்திரன்.

அப்பாவி said...

ஆபாசத்தை மட்டுமே விற்கும் சினிமாவிற்கு, விமர்சனம் எழுத சாரு போதும்.
வெறும் தொடை கறியும் , தொப்புள் கறியும் விற்கும் சினிமாவிற்கு இதுவே அதிக தகுதி.

Unknown said...

Threesome, fetish என்றால் என்ன என்பது பற்றி மிக தெளிவாக சாரு நிவேதிதாவின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விமர்சனம் ஊடாக விளங்கிக்கொண்டேன், சாரு நிவேதிதாவுக்கு நன்றி. சாரு நிவேதிதா நீங்கள் பேசாமல் நீலப்படங்கள் எடுக்கலாமே. மிக ரசனையோடு எடுப்பீர்கள் என்பது எனது கருத்து. ஏன் சும்மா தமிழில் எழுதிக்கொண்டு தமிழையும் சாகடித்து, அதனை வாசிக்கின்ற தமிழர்களையும் துன்பப்படுத்தி.

//ஏற்கனவே வன்முறையும், பாலியல் விபரீதங்களும் மிகுந்த நமது தமிழ் சமூகத்தில்// அடுத்தவன் காசுல குடிக்கும் சாரு நிவேதிதாவே, வேற எந்த சமூகத்திலும் இவற்றை பார்க்க வில்லையா நீ?? உன் அரிப்பெடுத்த கண்களுக்கு சில வேளை அப்படி தெரியுதோ! உன்னை மட்டும் வைத்துக்கொண்டே தமிழ் சமூகத்தினை அளந்து விட்டாயாடா? நீ திரைப்பட விமர்சனத்திற்காக சேர்த்துக்கொண்ட படங்களே உன் மனதை காட்டுகின்றதே.

அப்பாவி சொன்னது //ஆபாசத்தை மட்டுமே விற்கும் சினிமாவிற்கு, விமர்சனம் எழுத சாரு போதும்.
வெறும் தொடை கறியும் , தொப்புள் கறியும் விற்கும் சினிமாவிற்கு இதுவே அதிக தகுதி.//

சினிமால ஆபாசம் இருந்தா, அதனைவிட ஆபாசமாவா நாங்க எழுதிற எழுத்திலையும் இருக்கணும், இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டி கொடுத்தா அதையே நீங்களும் செய்வீங்களா? அந்த செயலுக்கு வேற பெயர் சொல்ல mudiyumaa? ஜட்டிய பற்றி எழுதுறது, ஜட்டிக்குள்ளேயே சுற்றி சுற்றி எழுதிறது ஒரு திரைப்பட விமர்சனம் ஆகுமா?

ஜீவேந்திரன் உங்களது ஆராய்வுக்கு எனது பாராட்டுக்கள்.

கமலேஷ் said...

உங்களுக்கு நான் சொல்ல நினைக்கிற பதில் என்னுடைய வலைத்தளத்தில் உள்ளது...உங்களின் எண்ணைகளை பகிர்ந்து கொண்டதற்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...

ஜீவேந்திரன் said...

நன்றி கமலேஷ் உங்களது சுயம்தேடும் பறவைகள் நன்றாக உள்ளது. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஆராய்வு said...

அப்பாவி உங்கள் பின்னூட்டமொன்று இங்கு போட முடியாமல் உள்ளது. பலதரப்பட்டவர்களும் வாசிப்பதால் கோபம் கொள்ளாமல் எழுதுங்கள். இங்கு பின்னூட்டமிடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்துள்ளது. அதுவே விரோதமானால் நன்றாக இருக்காது. தயவு செய்து மீண்டுமொருமுறை அழகாக எழுதும்படி தாழ்மையுடனும் அன்புடனும் கேட்டுக்கொள்கிறேன்.

அப்பாவி said...

அன்புள்ள ஐயா, மீண்டும் எழுத நேரம் மற்றும் அந்த கோபமும் இல்லாததால், தயவு செய்து, அதை நெறி படுத்தி வெளிஇடுங்களேன்.

ஆராய்வு said...

அப்பாவி எழுதிய எதிர்வினை இதுதான்-

//காந்தன் நான் சாரு நிவேதிதாவின் சொந்த தகுதி பற்றி சொல்லவில்லை. அவர் சினிமா பற்றி எழுதியது சரி என்றுதான் சொல்கிறேன். சினிமா ஒன்றும் விமர்சிக்க முடியாத புனிதமான விடயமில்லை.
சினிமாவில் ஊழல்களும், குற்றங்களும் மலிந்து கிடக்கின்றன. அது ஒரு சாக்கடையைப்போல நாறுகிறது. இளைய தமிழினம் நாசமாக்கப்படுகிறது. எனவே தான் நல்ல சினிமாவின் தேவை உள்ளது. அதை ஏற்படுத்த கட்டாயம் விமர்சனங்கள் மிக மிக அவசியம். அதை சாரு சொன்னால் என்ன வேறு யார் சொன்னால் என்ன? விடயம்தான் முக்கியம். //

அப்பாவி உங்களது கருத்துக்கு மிக மிக நன்றி. தொடர்ந்து இங்கு வெளிவரும் கட்டுரைகளுக்கு உங்களால் விமர்சனங்களை முன்வைக்குமாறு வேண்டுகிறேன்.

அப்பாவி said...

மிக்க நன்றி ஐயா....

ஆராய்வு said...

அப்பாவி அவர்களே என்னை நண்பர் என அழைத்தால் போதும் . நாம் அனைவரும் நண்பர்களே .
மேலும் நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில் எழுதினால் மிகவும் காத்திரமானதாகவும்
பயனுள்ளதாகவும் அமையும். இது என் தாழ்மையான கருத்து.

Nishanth said...

naan avarin indha vimarsanathaip padikkavillai aanal ivar munnar raa.paarthiban ezhuthiya oru katturaiyai vimarsanam seithirunthathum idhai oththathaagave irunththu. ivar oru kaama veRiyil thaan irukiRaar enbathu nandru therikiRathu. ivarin kaNNil pizhaiyaa allathu kaatchiyil pizhaiyaa enbathai avarE uNara vEndum.

KuRippu:- ivar kooRiyirukum sila kaama veLippaadugaL enathu paarvaikku pulapadavillai

ஜிஎஸ்ஆர் said...

"ஒரு திரைப்படம் கட்டாயம் வரலாற்று உண்மைகளையும், சரித்திர ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை"

நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் வெறும் ஒரு சினிமாகவோ இருந்தால் பரவாயில்லை ஒரு சரித்திர நிகழ்வை குறிப்பிடும் போது அவசியம் வரலாற்று நிகழ்வுகளை சரியாக சொல்ல வேண்டும் சினிமா என்பது சராசரி மனிதனுக்கும் எளிதாக சென்றடையும் ஒரு ஊடகம் எனவே வரலாற்றை சரியாக சொல்லவேண்டும்.

நீங்கள் கூறலாம் படத்தின் தொடக்கதிலேயே இது கறபனை என்று போட்டால் மட்டும் போதாது ஒரு நிமிடம் கற்பனை என டைட்டில் போட்டுவிட்டு இரண்டரை மணி நேரம் கதையை சொல்லும்போது கற்பனை என்பது மறக்கபட்டுவிடும்


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Kolipaiyan said...

ஏன் இந்த கொலைவெறி !

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.