Thursday 18 March 2010

போராளிகளும் நாய்களும் - கருணாநிதியின் பச்சை வேட்டை

கருணாநிதி / மாறன் குடும்ப பத்திரிகையான தினகரன் அண்மையில் வெளியிட்ட ஒரு செய்தி இது-

ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை கண்டவுடன் வெட்டிக் கொல்ல வேண்டும் என கிராம மக்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள். காரணம் இரவில் அவர்கள் நடமாடும்போது குரைக்கிறதாம். மேற்கு வங்கத்தில் அதிரடிப்படை முகாம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்களை ஒழிக்க போலீஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து Ôகிரீன் ஹன்ட்Õ என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். கிராமங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். இரவில் மாவோ தீவிரவாதிகள் நடமாட்டத்தின்போது, தெரு நாய்கள் குரைத்து அவர்களை காட்டிக் கொடுத்து விடுகிறதாம். அதனால் எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீ.வாதிகள். இதையடுத்துத்தான் கொலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும் மாவோ தீவிரவாதிகளுக்கு எதிராக கிராமம்தோறும் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. நாய்கள் என்ன பாவம் செய்தன? அவற்றை ஏன் கொல்ல வேண்டும்? உங்கள் சண்டையில் நாய்களை ஏன் இழுக்கிறீர்கள்? தயவு செய்து அவற்றை விட்டுவிடுங்கள் என பீட்டா அமைப்பும் கெஞ்சிப் பார்த்துவிட்டது. ஆனாலும் மாவோ தீவிரவாதிகள் தங்கள் உத்தரவை வாபஸ் பெறவில்லை.

இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள். கிராம மக்களுக்கு ஒரு பக்கம் தீவிரவாதிகளால் பிரச்னை. மறு பக்கம் அதிரடிப் படையினரின் விசாரணை தொல்லை. இவை போதாதென்று, நாய்கள் படுகொலை என்ற புதிய பிரச்னையும் சேர்ந்திருக்கிறது.

இந்த தினகரன் செய்தி சொல்ல வருவதென்ன?

ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்க பிரதேசங்களில் பழங்குடி மக்களின் பூர்வீக வாழிடங்களை இந்திய அரசாங்கம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு விற்று விட்டமையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பழங்குடி மக்களை அங்கிருந்து வெளியேற்றினால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது . பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான நரவேட்டை இடம்பெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒரு எதிரி நாட்டுக்கு எதிரான போரைப்போல இந்தியா தனது சொந்த மக்கள் மீது போரைத்தொடுத்துள்ளது. இதுவரை 700 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெரியவர்கள் என்று பாகுபாடில்லாமல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இது எதுவுமே இந்த தினகரன் பத்திரிகைக்கு தெரியவில்லை. அங்குள்ள மக்களது உண்மை நிலையை அறிய தினகரன் இதுவரை ஏதாவது முயற்சியை மேற்கொண்டதா ?

தினந்தோறும் கொல்லப்படுகின்ற மக்கள் குறித்தோ ..இராணுவ படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்தோ...அழிக்கப்பட்ட கிராமங்கள் குறித்தோ.. தகவல்களை தேடியறிந்து தினகரன் செய்தி வெளியிட்டதா?

'ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள்' என்று எழுதும் தினகரன் அங்கு கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு துளியும் கவலைப்படவில்லை.

அடிக்கின்ற கொள்ளையை பங்கிட்டு கொள்ளவும், நித்தியானந்தா விவகாரத்தை வைத்து பிழைப்பு நடத்தவும், நடிகைகளை வைத்து போட்டி நடத்தவுமே இந்த கொள்ளைக்கார கருணாநிதி குடும்ப ஊடகங்களுக்கு நேரம் போதவில்லை. இதில் எப்படி பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து செய்தி வெளியிடுவது?

குறிப்பிடப்படுகின்ற பிரதேசங்களுக்கு சுயாதீனமாக செய்தியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மக்களது உண்மை நிலையை எடுத்துச்சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 'எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீவீரவாதிகள்' என்ற விடயம் மட்டும் தினகரனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

என்னே ஒரு பத்திரிகா தர்மம்.....என்னே ஒரு நடுநிலை...

வாழ்க ஊடகத்துறை!

சென்னையிலிருந்து இரா. வெங்கட் மணி

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

-- ஜீவேந்திரன்

Jeevendran

8 comments:

Unknown said...

நாய்களை வர்க்க எதிரி பட்டியலில் இணைத்து விட்டார்களே! அவைகளை அழித்தொழிக்க நினைக்கிறார்களே! என்ன கொடுமை சார் இது!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

//'நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள்' என்று எழுதும் தினகரன் அங்கு கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு துளியும் கவலைப்படவில்லை//
நன்றாய் சொன்னீர்கள்,

//அடிக்கின்ற கொள்ளையை பங்கிட்டு கொள்ளவும், நித்தியானந்தா விவகாரத்தை வைத்து பிழைப்பு நடத்தவும், நடிகைகளை வைத்து போட்டி நடத்தவுமே இந்த கொள்ளைக்கார கருணாநிதி குடும்ப ஊடகங்களுக்கு நேரம் போதவில்லை. இதில் எப்படி பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து செய்தி வெளியிடுவது?//
நல்ல கேள்வி கேட்டு இருக்கின்றீர்கள்,,,

இப்போதெல்லாம் ஊடகங்கள் ஊடகங்களின் வேலையை செய்வதே இல்லை, ஏதேதோ பண்ணி பிழைப்பு நடாத்திக்கொண்டு உள்ளன. அதிலும் தமிழ் நாட்டு ஊடகங்கள் என்ன பண்ணுகின்றன என்று அவர்களுக்கே தெரியாது. பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும், பாதிக்கப்படபோகின்ற, இந்த ஏழை மக்களுக்காகவும் கவலைப்பட்டு கொள்கின்றீர்களே! உங்களை போன்ற ஒரு சிலராவது இப்படி எழுதுவது பாராட்டுக்குரியது. தொடர்ந்து எழுதுங்கள்...

ராமகிருஷ்ணன் த said...

Feel for people not for animals since now need care for our people,
Aircel takes care on tiger i think now all were must take care on our people then will take care on animals.
If they really have careness sure they take care on people but this never done in India.
Sun tv is worst by showing blue flims for our people, they always missed to raise public needs.

mayan said...

இலங்கையில் தமிழன் கொல்லப்பட்டபோது கூட செய்தி வெளியிடாத இந்த -----பத்திரிகை....இப்ப ...

Anonymous said...

நல்ல பதிவு

dheva said...

kalakkiteenga....Boss

Anonymous said...

Human should behave humanitarian of each other human. Race should respect to each other race. Country should be respect to each other country.

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.